“தேவன் பூமியின்மேல் காற்று வீசும்படி செய்தார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.”
— ஆதியாகமம் 8:1
தேவனுடைய ஒரு சுவாசம் எல்லாவற்றையும் மாற்றும்
- “காற்று” என்பதற்கான எபிரெய வார்த்தை ருவாஹ் (רוח) — ஆவி, சுவாசம் என்பதற்கும் இதே வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
- தேவன் தமது (சுவாசக்) காற்றை அனுப்பினதினால் அது முடிவடைந்தது.
- ஆதியாகமம் 1-ல் ஜலத்தின்மேல் அசைவாடின அதே ஆவியானவர், ஆதியாகமம் 8-ல் மறுபடியும் ஜலத்தின்மேல் அசைவாடி, நியாயத்தீர்ப்புக்குப் பின் ஒரு புதிய சிருஷ்டியைத் தொடங்கினார்.
ஒரே சுவாசத்திலிருந்து, மனுக்குலம் முழுவதும் பிறந்தது.
முதல் மனுஷனுக்கு ஜீவனைக் கொடுத்த அதே சுவாசமே, நம் அனைவருக்கும் ஜீவனையும், நம்பிக்கையையும், புதிய ஆரம்பங்களையும் கொடுக்கிறது.
This Spark is also published in Tamil. Genesis 8:1 — One Breath From God Changes Everything



